மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 11 வரங்களை கடந்த நிலையில், இறுதிக்கட்ட நிலையில் இருந்துவருகிறது. இன்றுடன் (2025 டிசம்பர் 27ம் தேதி) இந்நிகழ்ச்சி தொடங்கி 83 நாட்களை கடந்துள்ளது. அந்த வகையில் இந்த வீட்டிலிருந்து இதுவரை 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மீதம் தற்போதுவரை 11 போட்டியாளர்கள் இந்த வீட்டில் இருந்துவருகின்றனர். இந்நிலையில் இந்த வாரத்தில் அவர்களின் வீட்டிலிருந்து உறவினர்கள் இந்த பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர். மேலும் ஆதிரை (Aadhirai) இத நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரத்தில் வெளியேற்றப்பட்டிருந்தார். அந்த வாய்ப்பை அவர் பார்வதிக்கு (VJ Parvathy) கொடுத்திருந்தார். அதனால் பார்வதியின் தாய் ஒரு நாள் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று 2025ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதியான நிலையில், இன்று போட்டியாளர்களை விஜய் சேதுபதி சந்திப்பது வழக்கம். அந்த வகையில் அவரின் புது லுக் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. அந்த வகையில் இன்று வெளியான புரோமோவில் பார்வதி மற்றும் கம்ருதீன் (Kamruddin) மாறி மாறி தங்களை அசிங்கப்படுத்திக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழா – அரங்கத்திற்கு வந்த தளபதி விஜய் – பூஜா ஹெக்டே…!
இந்த பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது யார் :#Day83 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/DGhXc3FLqm
— Vijay Television (@vijaytelevision)
இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 11 வரத்தை கடந்த நிலையில், மக்களிடையே கலவையான வரவேற்பை பெற்று தொலைக்காட்சில் ஒளிபரப்பப்பட்டுவருகிறது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் டபுள் ஏவிக்ஷன் முறையில், FJ மற்றும் ஆதிரை என 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். அந்த வகையில் இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் ஏவிக்ஷன் இருக்காது என்று ஒருபுறத்தில் தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தில் இணைந்த அசுரன் பட நடிகர்.. இணையத்தில் வைரலாகும் பதிவு!
மற்றொருபுறம் இந்த வாரத்தில் சுபிக்ஷா இந்த போட்டியிலிருந்து வெளியேறுவார் என கூறப்படுகிறது. அது உண்மை என நாளை வரை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியில் இறுதிவரை வினோத், திவ்யா, பார்வதி மற்றும் அரோரா போன்ற போட்டியாளர்கள் செல்வார்கள் என்று வட்டாரங்கள் கூறுகிறது.