இன்றைய நவீன வாழ்க்கை முறையில் உணவுப் பழக்கம் நிறைய மாறிவிட்டன. பலரும் சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை உண்மை என்று நம்பி, மருத்துவ குறிப்புகளை மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மேற்கொள்கின்றனர். இது சில நேரங்களில் பலனை கொடுத்தாலும், பல நேரங்களில் பிரச்சனையாக மாறி விடுகிறது. இந்தநிலையில், குளிர்காலத்தில் (Winter) குளிரில் இருந்து தப்பிக்க பலரும் தண்ணீரை கொதிக்க வைத்து மட்டுமே குடிப்பது அத்தகைய ஒரு பழக்கமாகும். இது தொப்பை கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், சளி மற்றும் இருமலில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது என்று நம்பப்படுகிறது. வெதுவெதுப்பான நீரை (Hot Water) குடிப்பது தொண்டை மற்றும் நுரையீரலில் இருந்து சளியை அகற்ற உதவும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
சில நேரங்களில் இந்த நம்பிக்கைகள் நன்மை பயப்பதற்கு பதிலாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? நீங்களும் நாள் முழுவதும் ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பீர்களா? இந்த செய்தியில் இந்த விதி உடலுக்கு சரியா தவறா என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த ஃபார்முலா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!
வெந்நீர் நல்லதா? கெட்டதா?சூடான அல்லது கொதிக்கும் நீரைக் குடிப்பது நமது செரிமானத்தை மேம்படுத்துகிறது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், எந்தவொரு உணவையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அதன் நன்மை தீமைகளைப் புரிந்துகொள்வது முக்கியம். சூடான நீர் நிறைய நன்மைகளை கொண்டிருந்தாலும் , அதை தினசரி வழக்கமாக்குவது ஒவ்வொரு உடலுக்கும் நல்லதல்ல. குளிர்காலத்தில் சூடான அல்லது கொதிக்கும் நீரைக் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது குடலை தளர்த்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வயிற்று கனத்தன்மை போன்ற குளிர்காலப் பிரச்சினைகளைக் குறைக்கிறது.
வெந்நீர் உடலின் உட்புற வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. குளிர்ச்சியின் உணர்வைக் குறைக்கிறது. படுக்கை நேரத்திலும், உணவு உண்ணும் நேரத்திலும் சூடான நீரைக் குடிப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், நாள் முழுவதும் வெந்நீர் குடிப்பது சிலருக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அதிகமாக வெந்நீர் குடிப்பது வாய் மற்றும் தொண்டை வறட்சி, அமிலத்தன்மை அல்லது வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக ஏற்கனவே உணர்திறன் வாய்ந்த செரிமானம் உள்ளவர்களுக்கு இன்னும் பிரச்சனையை கொடுக்கலாம். சில நேரங்களில், உடலின் இயல்பான தாக அமைப்பும் பாதிக்கப்படலாம். இது மோசமான நீரேற்றத்திற்கு வழிவகுக்கும்.
ALSO READ: மாரடைப்பு வருவதற்கு கொழுப்புதான் காரணமா..? குளிர்காலத்தில் ஹார்ட் அட்டாக் ஏன் வருகிறது..?
வெந்நீர் எடை குறைக்க உதவுமா?வெந்நீர் குடிப்பது கொழுப்பைக் கரைக்க அல்லது எடை குறைக்க உதவும். அறிவியலின் படி, வெந்நீர் வளர்சிதை மாற்றத்தை சிறிது ஆதரிக்கிறது. ஆனால் இது ஒரு அதிசய தீர்வு அல்ல. உணவு, தூக்கம் மற்றும் செயல்பாடு இல்லாமல், வெந்நீர் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. குளிர்காலத்தில் கொதிக்கும் நீரைக் குடிப்பது தவறல்ல என்றாலும், வெந்நீரை மட்டும் குடிக்க வேண்டிய அவசியமில்லை. காலை உணவு மற்றும் உணவு நேரங்களில் வெந்நீர் குடிப்பது சிறந்த நடைமுறை. மற்ற நேரங்களில், சாதாரண நீரைக் குடிக்கலாம். இருப்பினும், வெந்நீர் குடிப்பது செரிமானம், நீரேற்றம் மற்றும் ஆறுதல் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும்.