With Love : அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜனின் 'வித் லவ்' பட ரிலீஸ் தேதி எப்போது? நியூ இயர் ஸ்பெஷல் அறிவிப்பு இதோ!
TV9 Tamil News January 01, 2026 11:48 PM

தமிழ் சினிமாவில் கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth). சினிமாவில் இயக்குநராக நுழைந்த இவர், இந்த படத்திலே ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். இதன் மூலம் இயக்குநராக மட்டுமில்லாமல் நல்ல நடிகர் என்பதையும் நிரூபித்து காட்டியிருந்தார். அந்த வகையில் இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. அந்த படம்தான் வித் லவ் (With Love). இந்த படத்தை ரஜினிகாந்தின் (Rajinikanth) மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth) தயாரிக்க, அறிமுக இயக்குநர் மதன் (Madhan)இயக்கியியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 45 நாட்களிலே முழுமையாக நிறைவைடைந்திருந்தது. அதை தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலும் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் அதிரடி காதல் மற்றும் நகைச்சுவை என கலவையான கதைக்களம் கொண்ட திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், தற்போது 2026ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் “2026ம் ஆண்டு பிப்ரவரி 06ம் தேதி” முதல் உலகமெங்கும் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : முத்து பட வீடியோ உடன் புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்… வைரலாகும் பதிவு!

இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் வெளியிட்ட வித் லவ் பட ரிலீஸ் தேதி பதிவு :

#WithLove will make you smile, laugh, and feel truly loved. After watching the final film, I felt happy and fulfilled, knowing our efforts resulted in something meaningful. I believe it’s going to be a special film for everyone.

Happy New Year, everyone 🙂 See you all soon in… pic.twitter.com/SvMSjisg8J

— Abishan Jeevinth (@Abishanjeevinth)

இந்த வித் லவ் படமானது அப்படியே நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் கதையைப் போலவே அமைந்துள்ளது என பலரும் கூறிவருகின்றனர். இப்படமானது பள்ளிப் பருவ காதல் முதல் தற்போதுள்ள காலத்து காதல் கதையை மையமாக கொண்டுள்ளது. இந்த படத்தின் மூலம் நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகவுள்ளார் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே 7ஜி ரெயின்போ காலனி 2 படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகவில்லை.

இதையும் படிங்க: விஜய் சார் திரைக்கதையில் ஒருபோதும் தலையிடுவதில்லை – ஏ.ஆர்.முருகதாஸ்

அதன் காரணமாக இந்த வித் லவ் படமே இவருக்கு தமிழ் கதாநாயகியாக அறிமுகமாகும் முதல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதன் மூலமாக இயக்குநர் அபிஷன் ஜீவிந்தும் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் எல்லாமே அருமையாக வந்துள்ளதாம். விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.