உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. மக்கள் பலரும் மகிழ்ச்சியாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்திலும் புத்தாண்டு பண்டிகை நள்ளிரவு முதல் களைகட்டிய நிலையில் சென்னையில் பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. அதன் பிறகு விடுமுறை தினம் என்பதால் பலரும் புத்தாண்டு மற்றும் விடுமுறையை கொண்டாடுவதற்காக சுற்றுலா தளங்களுக்கு செல்கிறார்கள்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காலை முதல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குவிந்தது. தற்போது இந்த ஆண்டின் முதல் சூரிய உதயத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் தமிழகத்தில் இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பரவலாக பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் ஆண்டின் முதல் சூரிய உதயத்தை பொதுமக்கள் கண்டு வசித்தது மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது.