தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27ம் தேதி கரூருக்கு சென்றபோது அவரின் வாகனத்திற்கு வழி விட மக்கள் பின்னோக்கி சென்ற போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் வரை உயிரிழந்தனர். கரூருக்கு மதியம் 12.30 மணிக்கு விஜய் வருவதாக அறிவிக்கப்பட்டதால் காலையிலிருந்து மக்கள் அங்க கூடியிருந்தானர். ஆனால் விஜய் வரவில்லை. நேரம் போக போக கூட்டம் அதிகமானது. கரூருக்கு விஜய் மாலை 7:30 மணிக்குதான் சென்றார். அந்த சாலை மிகவும் குறுகிய சாலை. எனவேதான் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் சொல்லப்பட்டது.
ஆனால் போலீசார் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை.. நாங்கள் கேட்ட இடத்தில் போலீசார் அனுமதி தரவில்லை என தவெக நிர்வாகிகள் சொன்னார்கள். கரூர் சம்பவம் விஜயின் அரசியல் வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. தமிழக அரசின் விசாரணையை நம்பாத தவெக உச்ச நீதிமன்றம் சென்றதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாகவே சிபிஐ அதிகாரிஅக்ள் கரூரில் முகாம்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தவெகவின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட சிலரை இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.முதல் இரண்டு நாட்கள் சாதாரண கேள்விகளை கேட்ட சிபிஐ அதிகாரிகள் மூன்றாம் நாள் சில கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டு திணறவிட்டிருக்கிறார்கள்.
விஜயை ஏன் சொன்ன நேரத்திற்கு நீங்கள் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லவில்லை? என அதிகாரிகள் புஸ்ஸி ஆனந்திடம் கேட்க அவர் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாராம். மேலும் ‘கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.. விஜயை சீக்கிரம் வர சொல்லுங்கள். கரூருக்குள் உள்ளே வர வேண்டாம். வேலுச்சாமி புரத்தில் வண்டியை நிறுத்துங்கள்’ என போலீசார் உங்களிடம் சொல்லியும் நீங்கள் வண்டியை நிறுத்தாமல் கூட்டத்தில் வண்டியை விடுமாறு ஏன் சொன்னீர்கள்?’ என வீடியோ ஆதாரத்துடன் கேள்வி கேட்க ஆதவ் அர்ஜுனாவும் தடுமாறினாரம்.
இறுதியில் முக்கியமான கேள்விகள் கொடுத்து இதற்கான பதில் எழுதி கொடுத்துவிட்டு செல்லுங்கள் என சிபிஐ அதிகாரிகள் சொல்ல புலம்பிக்கொண்டே பதிலை எழுதி கொடுத்துவிட்டு டெல்லியில் இருந்து சென்னை வந்திருக்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.