தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிரான பலமான கட்சியே இல்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிரான பலமான கட்சியே இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முடிவுகளை டெல்லி தலைமை எடுத்துவிட்டு அதனை அதிமுக மீது திணிக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாஜக மற்றும் அதன் B டீமை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். நீண்ட காலமாக பிரதான போட்டியாளராக அதிமுக இருந்தாலும், இப்போதைய நிலையில் பலம் வாய்ந்த போட்டியாளர் யாரும் இருப்பதாக நான் கருதவில்லை. பலவீனமான நிலையில் அதிமுக இருந்தாலும், அதைதான் பிரதான எதிர்க்கட்சியாக நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.