Ajith: அஜித் ஸ்ட்ரேட்டஜிய கைவிட்ட சிவகார்த்திகேயன்! தொடரும் விஜயுடனான மோதல்
CineReporters Tamil January 02, 2026 02:48 AM

பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படமும் பராசக்தி திரைப்படமும் ஒன்றாக வெளியாக இருக்கின்றது. பராசக்தியும் ஜனநாயகனும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆக இருக்கின்றன என்ற செய்தி வெளியானதில் இருந்து விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர். விஜயுடனேயே மோத பாக்குறியா? என்ன தில்லு உனக்கு என்றெல்லாம் சிவகார்த்திகேயனை கண்டபடி திட்டி வருகின்றனர்.

ஆனால் இதுக்கு முன்னாடி விஜய் படமும் அஜித் படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகியிருக்கின்றன. உதாரணமாக வாரிசு படமும் துணிவு படமும் ரிலீஸாகியது. அப்பொழுதெல்லாம் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் இப்படி சண்டை போட்டதே இல்லை. ஆனால் சிவகார்த்திகேயனு வரும் போது அவர் மீது விஜய் ரசிகர்கள் இவ்வளவு வன்மத்தை கக்கி வருகின்றனர். அதுதான் ஏன் என்று தெரியவில்லை.

ஆனாலும் இந்த மோதலை தொடர விடாமல் பார்ப்பது சிவகார்த்திகேயன் கையில் இருக்கிறது என கோடம்பாக்கத்திலும் சில பேர் கூறி வருகிறார்கள். இது விஜய்க்கு கடைசி படம். அதனால் பொங்கலுக்கு அண்ணன் படம் வருவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என ஒரு பதிவை போட்டால் இந்த மோதல் மேலும் வளராமல் பார்த்துக் கொள்ளலாம்.

இதே ரஜினி படம் வருகிறது என்றால் முதல் ஆளாக சிவகார்த்திகேயன் ‘ஐயோ தலைவர் படத்தோட என்னுடைய படத்தை மோத விடணுமா? வேண்டவே வேண்டாம் ’ என தயாரிப்பாளர் வீட்டு வாசலில் போய் கிடப்பார். ஆனால் விஜய் படம்னு மட்டும் வரும் போது ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. ஒரு சமயம் அஜித்தின் பேட்டி விஜய்க்கு எதிராக இருப்பதாக சமூக வலைதளங்களில் சித்தரிக்கப்பட்டது.

சுதாரித்துக் கொண்ட அஜித் அடுத்த பேட்டியில் விஜய் நல்லா இருக்க வேண்டும் என நினைப்பவரில் நானும் ஒருவன் என்பது போல் பேசி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்படி சிவகார்த்திகேயன் செய்தால் மட்டுமேதான் இந்த போட்டியை வளர விடாமல் தடுக்க முடியும் என வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.