எக்ஸ் (X) தளத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், பேருந்து இருக்கை தொடர்பாக ஒரு பெண்ணுக்கும் முதியவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த பெண் தனது செருப்பைக் கழற்றி முதியவரை அடிக்க முயல்கிறார். ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக அந்த முதியவர் அந்தப் பெண்ணைத் தடுத்து, அவரது முகத்திலேயே பலமுறை காலால் மிதிக்கிறார். இறுதியில் அந்தப் பெண் அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.
இந்த வீடியோவைப் பார்க்கும் பயனர்கள் இரு தரப்பிலும் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். “பெண் முதலில் வன்முறையைத் தூண்டியது தவறு” என்று ஒரு தரப்பினரும், “முதியவர் ஒரு பெண்ணை அத்தனை கொடூரமாக மிதித்திருக்கக் கூடாது” என்று மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர். மேலும் சில ஆண் பெண் சமம் என்பதை தாத்தா நிரூபித்து காட்டி இருப்பதாக கூறுகின்றனர்
இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.