ரயிலின் வாசலில் நின்று கொண்டு, தனது உடலை வெளியே சாய்த்து தலையை நீட்டியபடி ஆபத்தான முறையில் விளையாடிய இளம் பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே தருணத்தில், பக்கத்து தண்டவாளத்தில் மற்றொரு ரயில் மின்னல் வேகத்தில் கடந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக, அந்தப் பெண் தாக்கப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்பே அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்து உள்ளே இழுத்துக் காப்பாற்றினர். ஒரு வினாடி தாமதித்திருந்தால் கூட அந்தப் பெண்ணின் உயிர் போயிருக்கும் என்பதை அந்த வீடியோ அப்பட்டமாகக் காட்டுகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தக் காணொளி, ரயில் பயணத்தில் பாதுகாப்பற்ற முறையில் செயல்படுவது எவ்வளவு பெரிய விபரீதம் என்பதை உணர்த்துகிறது. லைக்ஸ்களுக்காகவோ அல்லது சாகசத்திற்காகவோ ரயிலின் படிக்கட்டுகளில் நின்றபடி இப்படி உயிருடன் விளையாடுவது மிகப்பெரிய முட்டாள்தனம் என நெட்டிசன்கள் பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். “மரணத்தின் வாசலில் நின்று விளையாடாதீர்கள்” என்று எச்சரிக்கும் இந்த வீடியோ, ரயில் பயணங்களின் போது நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.