EPFO : இனி யுபிஐ, ஏடிஎம் மூலமே பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. விரைவில் அமலுக்கு வரும் அசத்தல் அம்சம்!
TV9 Tamil News February 10, 2026 04:48 PM

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் (EPFO – Employee Provident Fund Organization) மூலம் இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பல்வேறு நன்மைகளை பெற்று வருகின்றனர். குறிப்பாக ஊழியர்களின் எதிர்காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஊழியர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த முக்கிய அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அது என்ன அம்சம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விரைவில் அமலுக்கு வரும் அட்டகாசமான அம்சம்

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பெயர்களில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் கீழ் பிஎஃப் (PF – Provident Fund) கணக்கு தொடங்கப்படும். அந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வரும். இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படவுள்ளதா? நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய தகவல்

இனி பேடிஎம், யுபிஐ மூலம் பணம் எடுக்கலாம்

ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றி பிஎஃப் பணத்திற்கு விண்ணப்பித்து பிறகு கையில் பணம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இதனால், உடனடி தேவைகளுக்கு பண கிடைக்காமல் ஊழியர்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில், தான் பிஎஃப் பணத்தை யுபிஐ (UPI – Unified Payment Interface) மற்றும் ஏடிஎம் (ATM – Automated Teller Machine) இயந்திரங்கள் மூலம் எடுக்கும் அம்சம் குறித்த அறிவிப்பை இபிஎஃப்ஓ வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது ஏப்ரல் 01, 2026 முதல் இந்த அம்சம் அமலுக்கு வர உள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்த 5 நாடுகளில் மிக குறைவான விலையில் தங்கம் வாங்கலாம்.. பட்டியல் இதோ!

இந்த புதிய அம்சத்தின் படி ரூ.25,000 வரை யுபிஐ மூலம் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் பணம் எடுக்கும்போது உங்களது பிஎஃப் கணக்கில் 25 சதவீத பணத்தை இருப்பு வைக்க வேண்டும் என்பது கட்டாய விதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.