தங்கம் விலை உயர்வு! மேலும் உயர வாய்ப்பு!
Top Tamil News February 11, 2026 01:48 PM

கடந்த ஒரு வாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. தங்கம் சுமார் 7% வீழ்ச்சியடைந்துள்ளது. வெள்ளி இன்னும் கடுமையாக சரிந்து 32% வரை இழப்பை சந்தித்துள்ளது. இந்த திடீர் வீழ்ச்சி முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை இரண்டு உலோகங்களும் சிறிய அளவில் மீண்டு உள்ளது.

சென்னையில் இன்று (பிப்.11) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,600க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.