சென்னை, பிப்ரவரி 11 : உலக அளவில் தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) விலை கடந்த சில நாட்களாக கடும் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தங்கம் இன்று (பிப்ரவரி 11, 2026) விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சீராக இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி விலைஜனவரி மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான உயர்வை சந்தித்து வந்தது. குறிப்பாக ஜனவரி 29, 2026 அன்று ஒரு கிராம் தங்க ரூ.16,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,34,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை அதிக விலைக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது அன்று தான். தங்கம் இத்தகைய கடுமையான உச்சத்தை தொட்ட நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.2 லட்சத்தை தாண்டி சாமானியர்களின் எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால், தங்கம் விலை படிப்படியாக சரிந்து தற்போது சீரான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
10 நாட்களுக்கான விலை நிலவரம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 02 பிப்ரவரி 2026 | ரூ.13,950 | ரூ.1,11,600 |
| 03 பிப்ரவரி 2026 | ரூ.14,270 | ரூ.1,14,160 |
| 04 பிப்ரவரி 2026 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
| 05 பிப்ரவரி 2026 | ரூ.14,320 | ரூ.1,14,560 |
| 06 பிப்ரவரி 2026 | ரூ.14,250 | ரூ.1,14,000 |
| 07 பிப்ரவரி 2026 | ரூ.14,420 | ரூ.1,15,360 |
| 08 பிப்ரவரி 2026 | ரூ.14,420 | ரூ.1,15,360 |
| 09 பிப்ரவரி 2026 | ரூ.15,650 | ரூ.1,17,200 |
| 10 பிப்ரவரி 2026 | ரூ.14,580 | ரூ.1,16,640 |
| 11 பிப்ரவரி 2026 | ரூ.14,600 | ரூ.1,16,800 |
இதையும் படிங்க : பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படவுள்ளதா? நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய தகவல்
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்இன்று (பிப்ரவரி 11, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து இரு கிராம் ரூ.14,600-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.