debit
ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் பண தேவைகளுக்காக வங்கிகளில் நிலம், வீடு ஆகியவற்றை அடமானம் வைத்து கடன் வாங்குவது, கிரெடிட் கார்டை பயன்படுத்துவது, வியாபார கடன், தனி நபர் கடன், விவசாய கடன் என பல கடன்களையும் வாங்குகிறார்கள்.. இவர்கள் யாரும் சந்தோஷமாக அந்த படத்தை செலவழிக்க கடன் வாங்குவதில்லை.. ஒரு பண நெருக்கடியோ, திருமணம் மற்றும் மருத்துவ செலவு, விவசாயம் செய்யவோ, அல்லது தொழில் தேவையோ, இல்லை ஒரு கடனை தீர்ப்பதற்காகவோ என முக்கிய காரணங்களுக்காக மட்டுமே அப்படி கடனை வாங்குகிறார்கள்..
அப்படி வாங்கும் கடனை பலராலும் சரியாக செலுத்த முடிவதில்லை.. அதற்கு பின்னணியில் தொழில் நஷ்டம், வேலை போனது, பொருளாதார நிலை கீழே போனது உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம்.. ஆனால் பணம் கொடுத்த வங்கிகள் அதை கண்டு கொள்வதில்லை.. சில வங்கிகள் பணத்தை வசூலிப்பதற்காகவே கலெக்ஷன் ஏஜெண்டுகளை வைத்திருக்கிறார்கள்.. அவர்கள் குண்டர்களை நியமிக்கிறார்கள்.
அவர்கள் கடன் வாங்கியவர்களை போனில் தொடர்புகொண்டு அவதூறாக பேசுவது, கோபத்தை ஏற்படுத்துவது போல பேசுவது, அசிங்கமாக பேசுவது என கோபத்தை கிளறி பணத்தை வசூலிக்கிறார்கள். அல்லது வீட்டிற்கு நேரடியாக வந்து கூட மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். இதனால் பலரும் மன உளைச்சல் அடைகிறார்கள். சிலர், மனமுடைந்து பலரும் தற்கொலை கூட செய்து கொண்டிருக்கிறார்கள்..
இந்நிலையில்தான், இதனை தடுக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய வழிமுறைகளை கொண்டு வந்திருக்கிறது.
அதன்படி:
காலை 8 மணிக்கு முன்பும் இரவு 7 மணிக்கு பின்பும் கடனை கேட்டு வாடிக்கையாளருக்கு போன் செய்யக்கூடாது.
கடன் வாங்கியவரை தவிர அவர் வீட்டில் யாரையும் தொடர்பு கொண்டு பேசக்கூடாது..
வாடிக்கையாளர் எங்கே வர சொல்கிறாரோ அங்குதான் அவரை சந்திக்க வேண்டும்..
கௌரவமான, மரியாதை வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்..
மிரட்டும்படியோ, தவறான வார்த்தைகளையோ பயன்படுத்தக் கூடாது.
இந்த நெறிமுறைகள் வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருவதாக ஆர்பிஐ தெரிவித்திருக்கிறது.