கிரிக்கெட்டை விட இதுதான் முக்கியமா?… சச்சினையே அதிரவைத்த யோகராஜ் சிங்கின் பேச்சு… அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!!
SeithiSolai Tamil March 28, 2026 08:48 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மீது, முன்னாள் கிரிக்கெட் வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அர்ஜுன் டெண்டுல்கருக்குப் பயிற்சி அளித்திருந்த யோகராஜ், அர்ஜுன் ஒருபோதும் தனது மகன் யுவராஜ் சிங் போல வர முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணமாக, அர்ஜுன் தனது கவனத்தை விளையாட்டில் செலுத்தாமல் சமூக வலைதள ரீல்கள் (Reels), இரவு நேர பார்ட்டிகள் மற்றும் பெண்களுடன் பொழுதைக் கழிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதே காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு தடகள வீரருக்குத் தேவையான ஒழுக்கமும், அர்ப்பணிப்பும் அர்ஜுனிடம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய யோகராஜ் சிங், கிரிக்கெட் என்பது வெறும் பெயரால் விளையாடும் விளையாட்டு அல்ல, அது கடின உழைப்பைச் சார்ந்தது என்று கூறியுள்ளார். “அர்ஜுனைப் பார்க்கும் போது அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை, அவர் தனது வாழ்க்கையைத் தவறான வழியில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்” என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.