தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் நடைபெறவுள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில் திமுக 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது. அதில், கூட்டணி கட்சிகள் போக மீதியுள்ள 164 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அவரின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி வழக்கம்போல் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலைய்ல்தான், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு காட்பாடி தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வயது முப்பு மற்றும் உடல்நிலை காரணமாக துறைமுருகனுக்கு சீட் ஒதுக்கப்படாது என திமுக வட்டாரத்தில் சொல்லப்பட்ட நிலையில் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது..
கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரால் ஆக்டிவாக செயல்படாத நிலையில் அவருக்கு இந்த தேர்தலில் சீட் கொடுக்க வேண்டாம் என திமுக கருதியது. அவரை நேரில் அழைத்து நீங்கள் விட்டுக் கொடுங்கள் எனவும் திமுக தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் துரைமுருகன் விடவில்லை. இந்த ஒருமுறை நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.. இனிமேல் கேட்க மாட்டேன் என அவர் அடம் பிடித்ததாக செய்திகள் வெளியானது..
அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ‘முதல்வரின் வீட்டில் முதல்வரின் தனிச் செயலாளரை பார்ப்பதற்காக துரைமுருகன் 3 மணி நேரங்கள் காத்திருந்தார். அதன் ன் அழுது கொண்டே அவர் காரில் ஏறி வீட்டுக்கு சென்றார்’ எனக்கூறியிருந்தார். எனவே, துரைமுருகனுக்கு சீட் ஒதுக்கப்படாது என்றே பலரும் நினைத்தனர்.
ஆனால், அவருக்கு காட்பாடி தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனை வருடங்களாக கட்சியில் இருந்தவர். பொதுச் செயலாளராக இருந்தவர்.. திமுகவில் பல பொறுப்புகளில் இருந்தவர் என்பதால் இந்த முறை கடைசியாக அவருக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது.