தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் திமுக தனது வேட்பாளர் பட்டியலை தற்போது அறிவித்திருக்கிறது. திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் 234 தொகுதிகளில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என அறிவித்தார். கூட்டணி கட்சிகள் போக 164 தொகுதிகளில் திமுக களமிறங்குகிறது
இந்நிலையில், மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.. கடந்த சில வருடங்களாகவே அந்த தொகுதியில்தான் போட்டியிட்டு ஸ்டாலின் வெற்றி பெற்று வருகிறார். அதேபோல் அவரின் மகன் உதயநிதி வழக்கம்போல் சேப்பாக்கம் தொகுதியில் களமிறங்குகிறார். ஏற்கனவே இந்த தொகுதியில் அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.
காட்பாடி தொகுதி துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. வயது முப்பு மற்றும் உடல்நிலை காரணமாக துறைமுருகனுக்கு சீட் ஒதுக்கப்படாது என திமுக வட்டாரத்தில் சொல்லப்பட்ட நிலையில் காட்பாடி தொகுதி துறைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது..
திருச்செந்தூர் தொகுதி அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், போடி நாயக்கனூர் தொகுதி ஓ.பன்னீர்செல்வத்திற்கும், மதுரை மத்தி பி.டி.அர் பழனிவேலுக்கும், ஒரத்தநாடு வைத்திலிங்கத்திற்கும், மன்னார்குடி டிஆர்பி ராஜாவுக்கும், திருச்சி மேற்கு தொகுதி கே.என் நேருவுக்கும், கோயம்புத்தூர் தெற்கு செந்தில் பாலாஜிக்கும், திருவண்ணாமலை ஏ.வா வேலுவுக்கும், சைதாப்பேட்டை மா.சுப்பிரமணியனுக்கும், துறைமுகம் சேகர்பாபுவுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.