காதலனை கரம் பிடித்த 'அவன் இவன்' புகழ் நடிகை ஜனனி..!
Seithipunal Tamil March 31, 2026 04:48 AM

'அவன் இவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜனனி ஐயர். தொடர்ந்து 'தெகிடி', 'அதே கண்கள்', 'பலூன்', 'ஹாட்ஸ்பாட்' உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாது 3 Dots, 7th Day, Mosayile Kuthira Meenukal, Koothara என சில மலையாளப்படங்களிலும் நடித்துள்ளார். அதேபோன்று பிரபல 'ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அனைவரும் பரிட்சியமானார்.

சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வருபவர் சாய் ரோஷன்- ஜனனி இருவரும் பல நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று சாய் ரோஷன் ஷாம் - ஜனனி இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.