2 தொகுதிகளில் போட்டி!.. ஹீரோவுக்கு பயம் எதுக்கு?.. விஜயை கலாய்க்கும் சீமான்...
WEBDUNIA TAMIL April 01, 2026 07:48 PM


நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.. அதோடு கட்சி துவங்கியது முதலே அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதேநேரம் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் பற்றி அவர் பேசுவதில்லை.. அதே போல் விஜய் கடுமையாக ட்ரோல் செய்துவரும் நாம் தமிழர் கட்சியை பற்றியும், விஜயை விமர்சித்து வரும் சீமானை பற்றியும் கூட அவர் எங்கும் எந்த விமர்சனமும் செய்வதில்லை..

ஒருபக்கம் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். இதில் ஏதேனும் ஒன்றில் நாம் வெற்றி பெற்று விடுவோம் என விஜய் நம்புகிறார். சமீபத்தில் பெரம்பூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் அவர் துவங்கினார்.. அதன்பின் முதல்வர் முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்றார். ஆனால் அங்கு அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்ததால் பிரச்சாரத்தை முழுமையாக முடிக்காமல் சென்று விட்டார்.

ஒருபக்கம் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது அவரின் பயத்தை காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். ஏனெனில், ஜெயலலிதா மட்டுமே பல வருடங்களுக்கு முன்பு அப்படி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அதன்பின் தமிழக அரசியல்வாதிகள் யாரும் அப்படி போட்டியிட்டதில்லை.

இந்நிலையில், கோவையில் பிரச்சாரத்தில் பேசிய சீமான் ‘தன்னையும் நம்பாமல் மக்களையும் நம்பாதவன்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவான்.. ஆனால் வசனம் மட்டும் பேசுவார்கள்.. பெரிய ஹீரோ என்றால் ஒரே தொகுதியில் தனித்து நிற்க வேண்டும். நம்பிக்கையோடு இருங்க..வெற்றி நிச்சயம் என வசனம் பேசினால் போதுமா?. முதலில் உனக்கே நம்பிக்கை இல்லை’ என்று பேசியிருக்கிறார்..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.