“தன்னையும் மக்களையும் நம்பாதவன்தான் 2 தொகுதியில் போட்டியிடுவான்”- சீமான்
Top Tamil News April 01, 2026 08:48 PM

தன்னையும், மக்களையும் நம்பாதவன்தான் 2 தொகுதிகளில் போட்டியிடுவான், நம்பிக்கையுடன் இருங்கள் வெற்றி நிச்சயம் என்று சொல்கிறாயே... எனக்கே என் மேல் நம்பிக்கை இல்லையா? என நாதக ஒருங்கிணைப்பாளார் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவை பரப்புரையில் உரையாற்றிய நாதக ஒருங்கிணைப்பாளார் சீமான், “எந்த கட்சி மீதாவது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என கூற முடியுமா? தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் வாங்காத ஒரே கட்சி நாதக தான் என தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. சிறு குழந்தைகள் கூட நாதகவின் தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கிறார்கள். தன்னையும், மக்களையும் நம்பாதவன்தான் 2 தொகுதிகளில் போட்டியிடுவான், நம்பிக்கையுடன் இருங்கள் வெற்றி நிச்சயம் என்று சொல்கிறாயே... எனக்கே என் மேல் நம்பிக்கை இல்லையா? நான் மாஸூ... நான் பிளாஸ்ட்.... நான் உச்சம்னு வசனம் பேசுனா போதுமா? பெரிய ஹீரோன்னா ஒரே தொகுதியில் Confident ஆ நிக்க  வேண்டும். நான் 2 முறை தோற்றும் இப்பவும் ஒரே தொகுதியில்தான் நிற்கிறேன். என் பிள்ளைங்க சொன்னாங்க, ஆனால் நான் கேட்கவில்லை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் முந்தைய அரசின் கடன்களை திருப்பி செலுத்த மாட்டோம். வீண் செலவுகளால் மக்களை கடனாளிகள் ஆக்குவதை ஏற்க முடியாது.” என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.