சென்னை தலைமை தபால் அலுவலகம், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க நேரடி முகவர்களை தேர்வு செய்ய உள்ளது.
பணி: அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். (அதிகபட்ச வயது வரம்பு குறித்த நிபந்தனை இல்லை).
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
வேலையில்லாத இளைஞர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள், மகிளா மண்டல் உறுப்பினர்கள், காப்பீட்டுத் துறையில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் இதில் பங்கேற்கலாம்.
தேர்வு செய்யப்படும் முகவர்கள் ரூ. 5,000 மதிப்பிலான தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC) அல்லது கிசான் விகாஸ் பத்திரம் (KVP) ஆகியவற்றை பாதுகாப்புப் பத்திரமாக அஞ்சல் துறையிடம் வழங்க வேண்டும்.

நேர்காணல் தேதி: ஏப்ரல் 13, 2026.
நேரம்: காலை 11:00 மணி.
இடம்: சென்னை தலைமை தபால் நிலையம், ராஜாஜி சாலை, சென்னை - 600001.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் தங்களது வயதுச் சான்று, முகவரிச் சான்று (ஆதார்/வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் மேற்கண்ட முகவரிக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம்.