19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று 24 வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் உதலில் களமிறங்கிய மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை எடுத்துள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் 05-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இடையே போட்டி நடைபெறத்து. அதில் பெங்களூரு அணி அபார வெற்றிப்பெற்றது.
அதே நேரம் அந்த போட்டியில் பெங்களூரு அணியின் டிஜே தோசை.. இட்லி. சாம்பார் சட்னி.. சட்னி என்ற பாடலை அவ்வப்போது ஒலிக்க விட்டனர். அதே நேரம் சென்னை வீரர்கள் அவுட் ஆகி பெவிலியன் செல்லும் போது அவர்களை கிண்டல் செய்ததோடு, சென்னை அணி ரசிகர்களையும் மனம் புண்படும் படி, கிண்டல் செய்தனர்.

இந்நிலையில், இந்த இட்லி, சாம்பார், சட்னி பாடல் ஒளிபரப்பப்பட்டது, தமிழ்நாட்டின் அடையாளங்களையும், தங்கள் அணியையும் கேலி செய்யும் விதமாக அமைந்ததாக கூறி சென்னை அணி சார்பில் பிசிசிஐயிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை அணியின் ஆதரவாளர்களுக்கு சிலர் அங்கு தொந்தரவு கொடுத்ததாகவும், சென்னை அணி புகாரில் தெரிவித்துள்ளது. அதாவது சொந்த மைதானத்தில் விளையாடும் அணிக்கு ஆதரவாக அமைக்கப்படும் டிஜே, பெங்களூரு மைதானத்தில் எதிர் அணியை கேலி செய்யும் வேலையை செய்ததாகவும், இதுகுறித்து பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை அணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.