“ஆளுநரே…. இது உங்களுக்குக் கடைசி எச்சரிக்கை” விஜய்க்காகக் குரல் கொடுக்கும் கை சின்னம்….!!
SeithiSolai Tamil May 07, 2026 04:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை நிரூபிக்கத் தவெக தலைவர் விஜய் தீவிரமாக முயன்று வருகிறார். காங்கிரஸ் ஏற்கனவே தனது 5 எம்எல்ஏக்களுடன் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 113-ஆக உயர்ந்துள்ளது. எனினும், மெஜாரிட்டிக்கு இன்னும் 5 இடங்கள் தேவைப்படுவதால், ஆளுநர் ஆர்.வி. அலேக்கர் இதுவரை ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை.

இந்தத் தாமதம் தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிப்பெரும் கட்சியின் தலைவரை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் கடத்துவது ஜனநாயகப் படுகொலை. தவெகவினர் அமைதி காக்கும் இந்தச் சூழலை ஆளுநர் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது.

உடனடியாக விஜய்க்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும், இல்லையெனில் தமிழகம் தழுவிய அளவில் மாணவர்களைத் திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகையைத் தடுக்கப் பின்னால் இருந்து யாரோ இயக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்த அறிக்கை, கோட்டையை நோக்கி நகரும் தவெக-விற்குப் பெரும் ஆதரவாகப் பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.