தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காங்கிரஸ் ஆதரவுடன் சேர்த்து 113 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரி தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேற்று புதன்கிழமை விஜய் சந்தித்து கடிதம் அளித்தார். அப்போது, பெரும்பான்மையே நிரூபிப்பதற்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கிய நிலையில், ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று வியாழக்கிழமை ( மே 7- ஆம் தேதி) மீண்டும் தமிழக பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரை சந்தித்துள்ளார். இதில், தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு விஜய் வலியுறுத்த இருப்பதாக முதலில் கூறப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அழைப்புபின்னர், தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் பதவி ஏற்றதும் சட்டமன்றத்தில் விரைவில் பெரும்பான்மையே நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று வியாழக்கிழமை ( மே 7- ஆம் தேதி) தமிழக வெற்றி கழக தலைவர் முதல்வராக பதவியேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யிடம் ஆளுநர் எழுப்பிய கேள்விகள்இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்திடம் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் அர்லேகர் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு, தவெக தலைவர் விஜய் பதில் அளித்துள்ளார். அவை என்ன மாதிரியான கேள்விகள் என்பதை பார்க்கலாம்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஆளுநர் எழுப்பியதா கூறப்படுகிறது. இதற்கு விஜய் பதில் அளித்துள்ளார்.