ஆடி மாதத்தின் 5ம் ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 16ம் தேதியான இன்றைய நாளின் 12 ராசிகளுக்குமான பலன்களைப் பற்றி நாம் காணலாம்.
போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் குறையும். இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். எதிர்பாராத தனவரவுகள் ஏற்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.
உடன் இருப்பவர்கள் பற்றிய கண்ணோட்டங்களில் மாறுபாடு ஏற்படும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் பிறக்கும். நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். சக ஊழியர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். புதுமையான சில விஷயங்கள் மீது ஆர்வம் ஏற்படும்.
பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். மேல்நிலைக் கல்வியில் தெளிவுகள் பிறக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தாய் வழி உறவினர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.
எதிலும் தீர யோசித்து முடிவு செய்யவும். கடன் பிரச்சனை தீர ஆலோசனை கிடைக்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். வியாபாரத்தில் ஒப்பந்தம் சாதகமாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். உணவு செயல்களில் சற்று கவனம் வேண்டும். பெரியோர்கள் இடத்தில் பொறுமை வேண்டும்.
உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். பயணம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.
எதிலும் நேர்மறை சிந்தனை உடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்ல முடிவினை தரும். மற்றவர்கள் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும்.
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். தவறிய சில பொருள்கள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த ஒப்பந்த பணிகள் சாதகமாகும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருந்து நெருக்கடியான சூழல்கள் மறையும். கடன் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும்.
உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். எதிலும் துரிதத்துடன் செயல்படுவீர்கள். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் பற்றிய புதிய தேடல்கள் உண்டாகும்.
மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். சுப காரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும்.
எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். சில அனுபவங்கள் மூலம் புதிய அத்தியாயங்கள் பிறக்கும்.
குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பார்த்த சில பணிகள் முடிவடைவதில் தாமதம் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும். சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். உணவு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும்.
நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். எந்தச் செயலிலும் உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் மேம்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். சிந்தனை போக்கில் மாற்றம் காணப்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதுவிதமான இலக்குகள் பிறக்கும்.