பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து, அமைக்க முந்தைய ஆட்சியில் திட்டமிட்டப்பட்ட புதிய விமான நிலையத்தை மாற்ற வேண்டும் என்று தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்னர் முதல்வர் விஜய் பேசியிருந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முயற்சி கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்துள்ளார்.
புதிய விமான நிலையம் அமைக்க விவசாயிகளும் விவசாயமும் பொதுமக்களும் பாதிக்கப்படாத வகையில் வேறு ஒரு இடம் தேர்வு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது