மதுரை: மதுபோதையில் சிறுவன் மீது கார் மோதல்; போலீஸ் SPயின் உறவினர் எனக்கூறி தப்பிக்க முயற்சி !
அருண் சின்னதுரை August 24, 2026 12:44 PM

மதுபோதையில் கார் ஓட்டி சிறுவன் மீது மோதிய இளைஞர் கைது. காரை நிறுத்தி இளைஞரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.

மதுபோதையில் கார் ஓட்டி சிறுவன் மீது மோதிய இளைஞர்
 
மதுரை பாண்டிகோவில் – சிவகங்கை சாலையில் மதுபோதையில் கார் ஓட்டி சிறுவன் மீது மோதிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த சந்தோஷ் யாதவ் (33), மதுபோதையில் காரை ஓட்டி சென்ற  போது சாலையில் சென்ற சிறுவன் மீது காரை மோதி நிற்காமல் சென்றுள்ளார். சிறுவனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அப்பகுதி பொதுமக்கள் காரை நிறுத்தி சந்தோஷ் யாதவை மடக்கி பிடித்துள்ளனர். அப்போது, தான் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங்கின் உறவினர் என அவர் கூறியதாகவும், இதனால் பொதுமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் காருக்குள் மதுபாட்டில் இருப்பதை சுட்டிக்காட்டி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 
சந்தோஷ் யாதவிடம் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து அவரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், காவல்துறையினர் காரை பறிமுதல் செய்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். சந்தோஷ் யாதவிடம் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மதுபோதையில் வாகனம் இயக்கியதாக சந்தோஷ் யாதவ் (33) கைது செய்யப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.