நெல்லை பொருநை அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்ப்பு
GH News July 29, 2024 05:16 PM

சென்னை: கீழடி மற்றும் ஒளிரும் திருமலை நாயக்கர் அரண்மனை போல், நெல்லையில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறக்கும் பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ஒளிரும் திருமலை நாயக்கர் அரண்மனை என்ற தலைப்பில் வெளியிட்ட பதிவில், “தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில், பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை மாறாமல் பேணிப் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார். அதனடிப்படையில் திருமலை நாயக்கர் அரண்மனை, தஞ்சாவூர் மராட்டா அரண்மனை, தரங்கம்பாடி டேனீஷ்கோட்டை ஆகிய வரலாற்றுச் சின்னங்களில் பாதுகாப்பு, மறுசீரமைப்பு பணிகள் ரூ.16.92 கோடியில் நடைபெற்று வருகின்றன.

மேலும், திருமலை நாயக்கர் அரண்மனை நாடகசாலை, பள்ளியறை பகுதிகளில் புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. திருமலை நாயக்கர் அரண்மனையில் மேற்குப்புறத்தில் கம்பிவேலி மற்றும் புல்வெளித்தளம் ரூ. 61 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் தொன்மையை பாதுகாக்கும் வண்ணம் அனைத்துத் தளப்பகுதிகளிலும் ஒரே மாதிரியான கற்கள் ரூ.3.73 கோடியில் பதிக்கப்பட்டு வருகின்றன.

திருமலை நாயக்கர் அரண்மனையை நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். மதுரைக்கு வட இந்தியாவில் இருந்து வருகை தரும் பார்வையாளர்களும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்த அரண்மனையைக் கண்டுகளிக்கின்றனர். பகல் நேரம் தவிர்த்து இரவு நேரத்திலும் திருமலை நாயக்கர் அரண்மனையின் எழிலைக் காண்பதற்கு உள் மற்றும் வெளிப்பகுதிகளில் ஒளியூட்டி அழகூட்டுவதற்கு மரபு சார் ஒளிவிளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.