யூரிக் அமிலம் அதிகம் உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிடலாமா?
Seithipunal Tamil September 22, 2024 10:48 PM

காய்கறி வகைகளில் ஒன்று கத்தரிக்காய். இந்தக் காய் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதனால், உடலில் அரிப்பு உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். இந்த நிலையில், கத்தரிக்காய் சாப்பிடுவதால் யூரிக் அமிலம் அதிகரிக்குமா என்று பலரது மனதில் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது சில அறிகுறிகள் தோன்றும். அதாவது, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரக நோய், மூட்டுகளில் வீக்கம் அல்லது வலி, முதுகு வலி, விரல்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.

*  ஆனால், கத்தரிக்காய் சாப்பிடுவதால் யூரிக் அமிலம் அதிகரிக்கும். அதனால், அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்,

* பொதுவாக யூரிக் அமில பிரச்சனைகள் உள்ளவர்கள் காளான், கீரை, முட்டை, பிரக்கோலி, காலிப்ளவர் உள்ளிட்ட உணவை தவிர்க்க வேண்டும்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.