பள்ளியில் வளைகாப்பு ரீல்ஸ்- ஆசிரியை மீதான நடவடிக்கையைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு
Top Tamil News September 23, 2024 12:48 AM

வேலூர் மாவட்டத்தில் நாளை அனைத்து வகை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ரீல்ஸ் வெளியிட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் ஆசிரியர்களை பழிவாங்கும் நடவடிக்கயை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து போராட்டம் கூட்டமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலூர் ஆசிரியர் இல்லத்தில் அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் ஜனார்த்தனை, ஜோச அன்னைய்யா, முகமது ஷானவாஸ், பாபு ஆகியோர்களின் தலைமையில் 24 ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு அவசர ஆலோசனை நடத்தினார்கள். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கேயநல்லூர் பள்ளியில் கடந்த மாதம் மாணவிகள் ரீல்ஸ் வெளியிட்டதை இணையதளத்தில் வைரல் ஆனதால் இம்மாதம் சம்மந்தமே இல்லாமல் ஆசிரியர் ஒருவரை பழிவாங்கும் நடவடிக்கையில் பணியிடை நீக்கம் செய்துள்ளது கண்டிக்கதக்கது. கல்வித்துறையின் விசாரணை ஆசிரியர்களை மட்டுமே விசாரித்தனர் மாணவர்களை ஏன் அழைத்து விசாரிக்கவில்லை. இது ஒருதலைபட்சமானது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊசூர் பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

காப்பி அடித்ததை தட்டிகேட்டாலும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். மாணவர்கள் எந்த ஒழுக்க கேடான செயலை செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை இல்லை என கல்வித்துறை அறிவித்ததால் மாணவர்களுக்கே இதன் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது. மாணவர்களின் புத்தகபையை சோதனை செய்ய கூடாது என உத்தரவு சோதனை செய்ய வேண்டுமென உத்தரவு எதை நாங்கள் செய்வது? இதுவா ஆசிரியர்களின் வேலை ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக பணிபாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து மாணவர்களை திருத்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் இல்லையென்றால் மாணவர்களின்  எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்படும். கற்பித்தல் பணிக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். கண்டிப்பும் தண்டிப்பும் இல்லாமல் மாணவர்கள் எப்படி திருந்துவார்கள்? ஆசிரியர்களை மட்டுமே குறை சொல்வதை விடுத்து அரசு இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், எனவே நாளை முதற்கட்டமாக அனைத்து வகை ஆசிரியர்களும் நாளை கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபடுவது எனவும் ஒழுங்கு நடவடிக்கை ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் ரத்து செய்யும் வரை தொடர்  போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறினார்கள்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.