தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
WEBDUNIA TAMIL September 23, 2024 12:48 AM

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களில் சில பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகும் வாய்ப்புள்ளது.

வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை, இடி, மின்னலுடன் பெய்யக்கூடும். சில இடங்களில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வலுவான காற்று வீசும்.

செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சில இடங்களில் லேசான மழை மற்றும்

செப்டம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

இன்றும் நாளையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை, இடி, மின்னலுடன் பெய்யும். வெப்பநிலை அதிகபட்சம் 34°C, குறைந்தபட்சம் 28°C ஆக இருக்கும்.

மேலும் மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் செப்டம்பர் 26 வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில், இடையிடையே 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.