டிசம்பர் 31ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்... பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!
Dinamaalai December 29, 2024 12:48 AM

புதுவருட பிறப்பை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை, குதிரை உள்ளிட்ட பலவகையான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “வண்டலூர் உயிரியல் பூங்கா வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காகப் பூங்காவிற்கு வார விடுமுறை விடப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்துவருகின்றனர்.

இந்த நிலையில் வருகிற செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) புத்தாண்டுக்கு முந்தைய நாள் என்பதாலும், மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை என்பதாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் வருகைக்காகத் திறந்திருக்கும்” என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.