சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு நீதி கேட்டு பாமக தலைவர் அன்புமணியின் மனைவியும், பசுமை தாயகம் தலைவருமான சௌமியா அன்புமணி உள்பட பாமகவினர் போராட்டம் நடத்த முயன்றனர்.
போலீசாரின் அனுமதியை மீறி போராட்டம் நடத்த முடிந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையல் சௌமியா அன்புமணி கூறியதாவது, போராட்டத்தை ஒடுக்க நினைப்பது நியாயமா? பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுவது தவறா? குற்றவாளியை பிடிக்க இவ்வளவு போலீஸ் போனதா? ரூ.1000 வேண்டாம் – பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்க என கூறியுள்ளார்.