சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் யாசர் – ப்ரியா தம்பதி. இந்த தம்பதிக்கு ஜலந்தரி மற்றும் ஆகாஷ் குமார் என ஒரு மகள் மகன் இருந்தனர். இந்த குடும்பம் திருவண்ணாமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இவர்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நான்கு பேரும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வெகு நேரம் ஆகியும் அவர்கள் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பணியாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நான்கு பேரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.
அங்கு கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில் நாங்கள் இறைவனிடம் செல்கிறோம் என்று எழுதியுள்ளனர். இதனை தொடர்ந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.