தமிழகத்தின் பெரிய திருவிழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் பொங்கல் விடுமுறைக்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு முடிந்த நிலையில், சொந்த ஊருக்கு செல்ல வழிதெரியாமல் தவித்து வருகின்றனார். ஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல இம்முறையும் டிக்கெட் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்தே விற்பனைச் செய்யப்பட்டு வரப்படுகிறது.
எப்போதும் போல பொங்கலன்று அமைச்சரும், அதிகாரிகளும் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் கட்டணத்தை அதிகரித்து விற்பனை செய்தால் நடவடிக்கை என்று அறிக்கை விடுவார்கள் என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு 5 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி – தாம்பரம் (வழி – தென்காசி, விருதுநகர், மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், தாம்பரம் – கன்னியாகுமரி (வழி – விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், திருநெல்வேலி)
சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் (வழி – ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர்) ஆகிய வழிதடங்களிலும்,
மானாமதுரை – சென்னை சென்ட்ரல் (வழி – மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி, கோவை, சேலம், காட்பாடி)
திருச்சி – சென்னை எழும்பூர் (வழி – விருத்தாச்சலம், சேலம், ஜோலார்பேட்டை, பெரம்பூர், சென்னை கடற்கரை) வழித்தடத்தில் ரயில்களை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.