தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் மலையாள சினிமாவிலும் பிசியான நடிகையாக இருக்கிறார். தற்போது பாலிவுட்டில் பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பாலிவுட்டுக்கு சென்ற கீர்த்தி சுரேஷ் மிகவும் கவர்ச்சியாக மாறியுள்ளார். தென்னிந்திய திரை உலகில் குடும்ப பாங்காக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்.
இவருக்கு சமீபத்தில் தான் அவருடைய காதலர் ஆண்டனி தட்டில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷை வட இந்திய பத்திரிகையாளர்கள் பொதுவெளியில் அவமானப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது அவர்கள் க்ரித்தி க்ரித்தி என்று கூறிய நிலையில் அவர் என் பெயர் கீர்த்தி சுரேஷ் என்று கூறினார். அதன்பிறகு அவர்கள் தோசை என்ற கீர்த்தி சுரேஷை அழைத்தனர். அதற்கும் அவர் பொறுமையாக கீர்த்தி சுரேஷ் என்று கூறினார். முதலில் ஷாக் ஆன கீர்த்தி சுரேஷ் என் பெயர் தோசா கிடையாது கீர்த்தி சுரேஷ். எனக்கு தோசை ரொம்ப பிடிக்கும் என்று கூறினார். மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram