எலுமிச்சை சாறை தடவி நன்கு ஊறவைக்க எந்த பிரச்சினை காணாமல் போகும் தெரியுமா ?
Top Tamil News December 30, 2024 11:48 AM

பொதுவாக  பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மரு தோன்றுகிறது .ஒரு வித வைரஸ்களால் இப்படி தோன்றிய மருவை சில இயற்கை வைத்தியம் மூலம் அகற்றி விடலாம் .அந்த வைத்தியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.பூண்டு சாறை எடுத்து மருவின் மீது பூசி ,ஒரு பாண்டேஜ் போட்டு விட்டால் நாளடைவில் அது உதிர்ந்து விடும் 2..மேலும் அன்னாசி பழம் ,அத்தி பழம் கொண்டு கூட அந்த மரு மீது பத்து போட்டு அகற்றி விடலாம்  


3.அடுத்து மருக்கள் உள்ள இடத்தில் எலுமிச்சை சாறை தடவி 20 நிமிடங்கள் வரை நன்கு ஊறவைக்க வேண்டும்.
4.அதன் பிறகு வெண்ணீர் கொண்டு மருவுள்ள இடத்தை கழுவி விட்டுக்கொண்டே வந்தால் அந்த மருக்கள் மாயமாய் மறைந்து விட வாய்ப்புண்டு
5.இஞ்சிக்கு மருவை அகற்றும் ஆற்றல் உண்டு .
6.இஞ்சியின் மேல் தோலை சீவிவிட்டு, அதை மரு உள்ள இடங்களில் நன்றாக தேய்க்க வேண்டும்.
7.சற்று வலி எடுத்தாலும் தொடர்ந்து தேய்க்க வேண்டும். இப்படி செய்து வந்தால் ஒரு வாரத்தில் மருக்கள் அனைத்தும் காணாமல் போகும் .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.