பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்க பாட்டி சொல்லும் வைத்தியம்
Top Tamil News December 30, 2024 11:48 AM

பொதுவாக  பீரியட்ஸ்  முறையற்று 35 நாள் 40 நாள் என்று தள்ளிபோகும்போது பெண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது .இது அவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை உண்டாக்கும் .இதனால் என்ன பாதிப்பு மற்றும் சரியாக்கும் வழிகளை பார்க்கலாம்
1.இதற்கு உணவு கோளாறுகள், இரத்த சோகை பிரச்சனை, தைராய்டு கோளாறுகள், எடை அதிகரிப்பு அல்லது குறைதல், காரணமாக கூறலாம்
2.ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, கருச்சிதைவு, மாதவிடாய் நிற்கும் காலம்  மற்றும் பிற காரணங்களை மருத்துவர்கள் கூறுகின்றனர் .இது ஒழுங்காக வர சில இயற்கை வைத்தியத்தினை பார்க்கலாம்

3.இஞ்சியில் இருக்கும் ஆரோக்கிய குணம் பெண்களின் பீரியட்ஸ் பிரச்சினைக்கு தீர்வு கூறுகிறது .
4.இதில் உள்ள மருத்துவ குணமிக்க அமிலங்கள் உடலின் ஹார்மோன் சுரப்புகளை சரிசெய்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் கருப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கிறது .
5.அந்த பாதிப்புள்ள பெண்கள் இஞ்சி கலந்து செய்யப்படும் உணவுகளில் இஞ்சி துண்டுகளை நன்கு மென்று சாப்பிட வேண்டும் .
6.மேலும் பீரியட்ஸ் ப்ராப்லம் உள்ள பெண்கள் ஏலக்காய்கள் சிலவற்றை பச்சையாகவும் அல்லது பொடி செய்து பால் கலக்காத தேநீரில் கலந்து அருந்தி வர முறையற்ற மாதவிடாய் நீங்கும்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.