நாளை டிசம்பர் 31ம் தேதி வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்வதற்கு கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள் மறந்துடாதீங்க. அபாரதத்துடன் நாளைக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துடுங்க. இல்லையெனில் தேவையில்லாத மன உளைச்சலுக்கும் சட்ட சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.
நாளைக்குள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யவில்லையெனில், கடன் பெறுவதில் சிக்கல்கள் எழக்கூடும். அதிக அபராதத்துடன் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
வருமான வரி தாக்கல் செய்ய மறந்துவிட்டவர்கள் நாளை டிசம்பர் 31ம் தேதிக்குள் அபராதத்துடன் "பிலேட்டட் ரிட்டர்ன்" வருமான வரி தாக்கல் செய்யலாம். இப்படி செய்வது எதிர்காலத்தில் சிக்கல்கள் உருவாகாமல் பாதுகாக்க உதவும். அதனால் மறக்காமல் நாளைக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துடுங்க.