நகைப்பிரியர்கள் அதிர்ச்சி... தங்கம் விலை மீண்டும் உயர்வு!
Dinamaalai December 30, 2024 04:48 PM

இன்றைய காலை நேர விலை நிலவரப்படி தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து விற்பனையாகி வருகிறது. கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.57,080க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வர்த்தக சந்தை விடுமுறை தினம் என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் சவரனுக்கு ரூ.57,080க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை நேர வர்த்தகம் துவங்கியதுமே தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 ரூபாய் உயர்ந்துள்ளது. 

இதன் மூலமாக ஒரு கிராம் தங்கம் ரூ.7,150க்கு விற்பனையாகிறது. அதே சமயம் சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.57,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வரும் 2025 புது வருடத்தில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 

 

 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.