உலகம் முழுவதும் திடீரென முடங்கிய சாட் ஜிபிடி... பதறிய பயனர்கள்!
Dinamaalai December 30, 2024 06:48 PM

உலகம் முழுவதும் சுமார் 25 கோடிக்கும் மேற்பட்டோர் சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அதிக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரப்படும் முக்கிய ஏஐ நிறுவனமாக இருந்து வரும் சாட்ஜிபிடி திடீரென நேற்று நள்ளிரவு முடங்கியது பயனர்களை பதற செய்தது.

உலகம் முழுவதும் பயனர்கள் சாட் ஜிபிடியை நேற்று நள்ளிரவு பயன்படுத்த முடியாத சூழல் உருவானது. இது குறித்து சமூக வலைதளங்களிலும் பயனர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர். 

சாட் ஜிபிடி பயன்படுத்திய பயனர்கள் திடீரென பயன்படுத்த முடியாமல் சிக்கலை எதிர்கொண்டனர். ‘இன்டர்னல் சர்வர் எரர்’ என்று பயனர்களுக்கு வந்ததாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். 

இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு சாட்ஜிபிடி முடங்கியது. அமெரிக்காவில் அப்போது பகல் நேரம் என்பதால் பலரும் சாட் ஜிபிடியைப் பயன்படுத்த முடியாமல் தவித்தனர். இந்த பிரச்சினை சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாகவும் அதன் பின்னரே சீரடைய துவங்கியதாகவும் தெரிய வந்துள்ளது. 

இது குறித்து, ‘தனது அமைப்பில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக’ சாட்ஜிபிடி கூறியுள்ள போதிலும் என்ன மாதிரியான பிரச்சனை என்று குறிப்பிடவில்லை. இதுபோல திடீரென சாட்ஜிபிடி முடங்குவது இது முதல்முறை கிடையாது. கடந்த டிசம்பர் 11ம் தேதி சாட்ஜிபிடி இதே போன்ற பிரச்சினையை எதிர்கொண்டு முடங்கியது குறிப்பிடத்தக்கது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.