தமிழகத்தில் இனி மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000... புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
Dinamaalai December 30, 2024 06:48 PM


தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். முன்னதாக தூத்துக்குடியில் மினி டைடல் பார்க்கை திறந்து வைத்தார். மாலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

இந்நிலையில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவிகளுக்கு வங்கி கணக்கு அட்டைகளை வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் பயன்பெறும் வகையில் மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. மேலும் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பில் மோட்டார் சைக்கிள் வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.