அதிர்ச்சி... திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் மாயம்!
Dinamaalai December 30, 2024 08:48 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் காணாமல் போனது குறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தூத்துக்குடி யாதவர் தெருவைச் சேர்ந்தவர் சந்தனகுமார். இவரது மனைவி ராணி (26). இவர்களுக்கு கடந்த மாதம் திருமணமான நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற ராணி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. 

பல இடங்களில் அவரைத் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சந்தனகுமார் வடபாகம் காவல் நிலையத்தில் ராணியின் கணவர் சந்தனகுமார் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.