தமிழகத்தில் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு பொங்கல் தொகுப்பை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அந்த வகையில் வர இருக்கும் பொங்கலுக்கும் சிறப்பு பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி 9 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நா. சுப்பையன் ” ஜனவரி 9ம் தேதி முதல் சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.