இறைச்சியில் கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி என பல வகைகள் உள்ளது. அவற்றில் ஆட்டு இறைச்சியில் தான் எக்கச்சக்கமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக ஆட்டு இறைச்சியின் முக்கிய பாகமாக கருதப்படும் மண்ணீரல் அல்லது சுவரொட்டியில் தான் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இப்போது ஆட்டின் மண்ணீரலில் சுவையான வறுவல் செய்வது எப்படி என்றும் மற்றும் அதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்றும் இந்த் பதிவில் காணலாம்.
மண்ணீரல் வறுவல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
சுவரொட்டி - 250 கிராம்
கிராம்பு - 3
சீரகம் - 1/4 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
வத்தல் - 4
பூண்டு - 2 ஸ்பூன் (சின்ன சின்ன நறுக்கியது)
இஞ்சி - 1 ஸ்பூன் (சின்ன சின்ன நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 கப் (சின்ன சின்ன நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
லவங்கப்பட்டை தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
மிளகுத்தூள் - 2
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் எடுத்து வைத்த சுவரொட்டியை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு எடுக்கவும். பிறகு அதை துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் சீரகம், கிராம்பு, கடுகு, வத்தல், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சில நொடிகள் வதக்கிக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் இலவங்கப்பட்டை தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். சில நிமிடங்கள் கழித்து அதில் சுவரொட்டியை சேர்க்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து சுமார் 20 நிமிடங்கள் வதக்கி கொள்ளுங்கள். மண்ணீரல் நிறம் மாறியதும் அதில் சிறிதழ் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மீண்டும் மசாலா சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் மிளகுத்தூளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான ஆட்டு சுவரொட்டி ரெடி! சூடான சாதத்துடன் இதை வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இதையும் படிங்க:
சுவரொட்டியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
மண்ணீரலில் புரோட்டின், இரும்புச்சத்து, ஜிங்க், பாஸ்பரஸ், செலினியம், வைட்டமின் சி, வைட்டமின் பி12 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதையும் படிங்க:
மண்ணீரல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1. ஹீமோகுளோபின் அதிகரிக்கும்:
ரத்த சோகை ஏற்படுவதற்கு உடலில் இரும்பு சத்து குறைபாடு தான் காரணம். மண்ணீரலில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் அதிகளவு புரதம் உள்ளது. இவை இரண்டும் உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும்.
2. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் சுவரொட்டி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
3. முடக்கு வாதத்திற்கு நல்லது:
முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு ஒரு முறை சுவரொட்டியை சாப்பிட்டு வந்தால் முடக்குவாதத்திலிருந்து பூரண நிவாரணம் கிடைக்கும்.
4. சிறுநீரகப் பிரச்சனையைத் தடுக்கும்:
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு சுவரொட்டி ரொம்பவே நல்லது. மாதத்திற்கு இரண்டு முறை சுவரொட்டியை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனை முழுமையாக நீங்கும்.
5. பெருங்குடல் அலர்ஜி:
ஆட்டு சுவரொட்டி பெருங்குடல் அலர்ஜிக்கு அருமருந்தாகும். எனவே பெருங்குடல் அலர்ஜி உள்ளவர்கள் மாதத்திற்கு இரண்டு முறை ஆட்டு மண்ணீரல் சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விரைவில் குணமடைவீர்கள்.