எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனை: உறுதி செய்தது ஐகோர்ட்..!
Webdunia Tamil January 02, 2025 08:48 PM

பெண் பத்திரிகையாளரை சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த எஸ்வி சேகர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எஸ்வி சேகர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை எம்பி-எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்தது. இதில், அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து எஸ்வி சேகர் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.