அரசு பள்ளி மாணவர்கள் எங்கள் பிள்ளைகளை போல என்றும், அவர்களை தாரை வார்க்க மாட்டோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
500 அரசு பள்ளிகள் தனியார் மயமாக்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக அண்ணாமலை உள்பட பல அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து வார்த்து கொடுப்பதாக நான் பேசவில்லை. உண்மை தன்மையை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று கூறினார்.
அரசு பள்ளி மாணவர்கள் எங்கள் பிள்ளைகளை போல என்றும், அவர்களை தாரை வார்க்க மாட்டோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.
ஏற்கனவே, தனியார் பள்ளி கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை பார்க்கப்படும் என்று அமைச்சர் பேசவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சியினர் ஆவேசமாக அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran