நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடி இனத்தைச் சேர்ந்த கோத்தர் இன மக்கள் மட்பாண்ட கலையில் கைதேர்ந்த கலைஞர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். இரும்பு பட்டறை நுட்பங்களையும் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். தனித்துவமான மொழி, உடை, இசைக்கருவிகள், வழிபாடு, நடனம், உணவு போன்றவற்றைப் பின்பற்றி வருகின்றனர். அய்யனோர், அம்னோர் மற்றும் கம்பட்ரயர் ஆகிய மூதாதையர்களைக் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
கோத்தர் பழங்குடிகள்கோக்கால் என்ற பெயரில் அழைக்கப்படும் கோத்தர் பழங்குடிகளின் கிராமங்களில் தற்போது குலதெய்வ திருவிழா நடைபெற்று வருகின்றன. ஊட்டி அருகில் உள்ள கொல்லிமலை கோத்தர் பழங்குடி கிராமத்தில் நடைபெற்ற பாரம்பர்ய கம்பட்ராயர் திருவிழாவில் ஆண்களும் பெண்களும் தங்களின் பாரம்பர்ய உடையில் நடனமாடி வழிபட்டனர்.
இந்த திருவிழா குறித்துத் தெரிவித்த கோத்தர் பழங்குடிகள், "எங்களின் பண்பாடுகளைப் பறைசாற்றும் வகையிலேயே எங்களின் கிராமங்களும் வாழ்வியல் முறைகளும் அமைந்திருக்கிறது. குல தெய்வ வழிபாடு எங்கள் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிறது. அறுவடை சார்ந்த கம்பட்ரயர் திருவிழாவில் பாலின பேதமின்றி அனைவரும் விரதம் இருந்து வழிபாடு செய்வோம்.
கோத்தர் பழங்குடிகள்இசையும் நடனமும் எங்கள் வழிபாட்டில் முதன்மையாக இருக்கும். 'ஆட்டாஸ் குப்பாஸ்' என்ற ராஜ வேடம் தரித்து ஆண்கள் ஆடும் பாரம்பரய நடனம் விழாவின் முக்கிய சடங்குகளில் ஒன்றாக இருக்கிறது. எங்கள் முன்னோர்கள் கடைப்பிடித்தவற்றை இன்றளவும் தொடர்கிறோம்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...