காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கர்ப்பிணியை கடத்திய அக்கா உள்பட 6 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
SeithiSolai Tamil January 26, 2025 01:48 PM

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி செட்டிங்குறிச்சி பகுதியில் தனுஷ்கண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த ரோஷினி என்ற பெண்ணை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீது திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு காதலர்கள் பாதுகாப்பு கேட்டு எடப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தற்போது ரோஷினி கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் ரோஷினியின் தந்தை குமாரசெல்வம் ஏற்பாட்டில் திடீரென ரோஷினியின் வீட்டிற்கு சென்ற மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அவரை கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்றனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது ரோஷினியின் குடும்பத்தினர் அடியாட்களை வைத்து அவரை கடத்தியது தெரியவந்தது. உடனே போலீசார் விரைந்து செயல்பட்டு ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வைத்து ரோஷினியை பத்திரமாக வீட்டினர். இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ரோஷ்னியின் தந்தை குமாரசெல்வம், தாய், சித்ரா, பெரியப்பா லட்சுமணன், அக்கா சௌமியா, குமார செல்வத்தின் நண்பர் வெங்கடாசலம், கருப்பண்ணன் ஆகிய ஆறு பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.