திரிபுரா செபாஹிஜாலா மாவட்டத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். அந்த பெண்ணின் கணவர் உள்ளூர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவர் முறையாக திருப்பி செலுத்தவில்லை. இந்த நிலையில் கடன் வாங்கியவரின் மனைவி தனது வீட்டு சமையல் அறையில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சுய உதவி குழுவை சேர்ந்த சில பெண்கள் வீட்டிற்குள் நுழைந்து கடனை உடனே செலுத்துமாறு கூறினார்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணை அவர்கள் வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து கடுமையாக தாக்கினார். மேலும் அவரது தலைமுடி பாதியை மொட்டை அடித்துள்ளனர். இதுகுறித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற மகளிர் போலீசார் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.