#featured_image %name%
இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இங்கிலாந்து அணியை (20 ஓவர்களில் 165/9, ஜாஸ் பட்லர் 45, ப்ரைடன் கார்ஸ் 31, ஜேமி ஸ்மித் 22, ஹாரி ப்ரூக் 13, வருண் சக்கரவர்த்தி 2/38, அக்சர் படேல் 2/32, அர்ஷதீப் சிங், ஹார்திக் பாண்ட்யா, வாஷிங்க்டன் சுந்தர், அபிஷேக் ஷர்மா தலா 1 விக்கட்) இந்திய அணி (119.2 ஓவர்களில் 166/8, திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 72, வாஷிங்க்டன் சுந்தர் 26, ப்ரைடன் கார்ஸ் 3/29, ஆர்ச்சர், அதில் ரஷீத், மார்க் வுட், ஓவர்டன், லிவிங்க்ஸ்டோன் தலா 1) இரண்டு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து அணியை மட்டையாடப் பணித்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (4 ரன்) மற்றும் பென் டக்கட் (3 ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஜாஸ் பட்லர் (30 பந்துகளில் 45 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) நன்றாக ஆடி பத்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார். ப்ரைடன் கார்ஸ் 17 பந்துகளில் 3 சிக்சர், 1 ஃபோருடன் 31 ரன் எடுத்தார். இவர்கள் இருவரைத் தவிர மற்றவர்கள் நிலைத்து ஆடவில்லை எனவே இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 165 ரன் எடுத்திருந்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் (7 பந்துகளில் 5 ரன்), அபிஷேக் ஷர்மா (6 பந்துகளில் 12 ரன்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் (7 பந்துகளில் 12 ரன்), துருவ் ஜுரல் (5 பந்துகளில் 4 ரன்), ஹார்திக் பாண்ட்யா (6 பந்துகளில் 7 ரன்) ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் திலக் வர்மா (55 பந்துகளில் 72 ரன்) வாஷிங்க்டன் சுந்தர் (19 பந்துகளில் 26 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் இந்திய அணி 20ஆவது ஓவரில் 8 விக்கட் இழப்பிற்கு 166 ரன் எடுத்து வெற்றிபெற்றது.
திலக் வர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி 2-0 என்ற ஆட்டக்கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த ஆட்டம் 28 ஜனவரில் குஜராத் ராஜ்கோட்டில் நடைபெறும்.
News First Appeared in